About
பள்ளியைப் பற்றி
செயின்ட் பால் பப்ளிக் ஸ்கூல் கிராம மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் தொண்டுள்ளம் கொண்ட ஆண்டவர் கல்வி அறக்கட்டளையால் 2009 ஆம் ஆண்டு CBSE பாடத்திட்டத்தின்படி 85 பிள்ளைகளைக் கொண்டு தொடங்கப்பட்டது,
அதிகம் படிக்காத கிராமத்து பெற்றோரின் பிள்ளைகளை கல்வி, ஒழுக்கம், தூய்மை முதலியவற்றில் தரம் உயர்ந்த பிள்ளைகளாக கொண்டுவரும் நோக்கில் நல்ல திறமையான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்களை நல்ல ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக கொண்டு வர தெய்வபக்தி, இறையருள்,, இறைநம்பிக்கை, இறையாண்மை, மனிதநேயம், தியாக சிந்தனை போன்ற நல்ல குணங்கள் இங்கு முக்கியத்துவப் படுத்தப்படுகிறது,
இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் நல்ல காற்றோட்டமான, விசாலமான இருக்கைகள் உள்ள வகுப்பறைகள், சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தூய்மையான கழிவறைகள் என பிள்ளைகளுக்கு அனைத்து நிலையிலும் சுத்தம் சுகாதாரம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
செயற்கை கோள் உதவியுடன் எல்லா வகுப்பறையிலும் கம்ப்யூட்டர் புரஜெக்டர் (ஸ்மார்ட்கிளாஸ்) மூலம் பாடம் கற்பிக்கும் முறை, Pre KG. முதல் UKG வரை மான்டிசோரி கற்பிக்கும் முறை (Montessori method). சிறந்த கையெழுத்து (Cursive) பயிற்சி, ஆங்கிலம் பேசும் பயிற்சி (Spoken English) என சிறந்த கல்விக்கான அனைத்து வசதிகளும் பயிற்சி முறையில் கடைபிடிக்கப்படுகின்றன.
ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு சிறந்த ,முறையில் பாடம் கற்பிக்க அவர்களுக்கு உளவியல் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது, பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர விளையாட்டு, யோகா, நடனம், பாட்டு, கராத்தே, முதலியவற்றிற்கு உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள் உள்ளன. இங்கே படிக்கும் பிள்ளைகள் நல்ல குடிமகனாக கல்வியிலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்து விளங்குவார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை,
"கல்வி கற்பது மட்டும் சிறப்பல்ல, அதை அனைவருக்கும் கற்றுக்கொடுப்பதே சிறப்பாகும்" இவ்வரிகளின் மகிமையை உணர்ந்த சான்றோர்களால் உருவாக்கப்பட்டதே செயின்ட் பால் பப்ளிக் பள்ளியாகும். ஆண்டவர் கல்விக் குழுமத்தின் முதல் கனி என்னும் சிறப்பும் இப்பள்ளிக்கு உண்டு.